MARC காட்சி

Back
மான், மாடு, புலி, மரம், மனித உருவங்கள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மான், மாடு, புலி, மரம், மனித உருவங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

              நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் உள்ள கரிக்கையூர் எனும் மலை கிராமத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் குறும்பவரை எனும் பாறை ஒதுக்குக்கில் உள்ள ஓவியஙகளை சென்னை, அரசினர் கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு வெளி உலகுக்கு அறிமுகம் செய்தனர். குறும்புவரை எனும் இப் பாறை ஒதுக்குக்கு அருகே உள்ள கிராமங்களில் இருளர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர், அதற்கு தொலைவே குறும்பர் இன மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் இவ்விடம் குறும்பர் வசம் இருந்திருக்கலாம் பின்னர் இருளர் இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் வசம் தக்கவைத்திருக்கலாம்.

            இப்பாறை ஒதுக்கு அமைந்துள்ள இடம் வேட்டைச் சமூகங்கள் வனத்தினுள் வேட்டையாட வரும் காலங்களில் தற்காலகமாக தங்குவதற்கு உகந்த இடமாகும். இது ஒரு சிறு ஓடைக்கு அருகாமையில் உள்ளது. சுமார் 50 அடி உயரம் 100 அடி நீளம் கொண்ட இப் பாறை ஒதுக்கு இரண்டு அடுக்காய் அமைந்துள்ளது. மேல் அடுக்கு விலங்குகள் ஏதும் வராத வண்ணம் மிகவும் பாதுகாப்பானது. இங்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன அவையாவும் மேல் அடுக்கு சுவரில் உள்ளது. ஒவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது.

         இங்கு மரம், விலங்குகள் மற்றும் மனிதர்கள், வேட்டையாடுவது, சண்டையிடுவது, நடனமாடுவது போலவும் சில அடையாளம் காண இயலாத ஓவியங்கள் யாவும் வெள்ளை வண்ணத்திலேயே உள்ளது அதுபோல பெரும்பாலன உருவங்கள் கோட்டோவியங்களாகவே உள்ளது இருப்பினும் சில இடங்களில் உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டு பின்னர் உட்புறம் வண்ணம் பூசப்பட்டும் காணப்படுகின்றது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
520 : _ _ |a

அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் பாறை ஒதுக்கில் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் கண்ட காட்சியின் சிலவற்றை ஓவியன் வரைந்துள்ளான். ஒரு நிகழ்வை ஓவியமாக கட்டமைக்கும் போது உள்ள நுணுக்கங்களைத் தெரிந்து ஓவியத் தொகுதியினை சில இடங்களில் தீட்டியுள்ளான். இவ்வோவியங்கள் வழியாக அக்காலகட்டங்களில் வனத்துக்கு உள்ளே மற்றும் வெளியே நிகழ்ந்த சம்பவங்களை அறியும் வண்ணம் உள்ளது.

653 : _ _ |a கரிக்கையூர், பாறை ஓவியம், நீலகிரி, கோத்தகிரி, புதிய கற்காலம், பெருங்கற்காலம், தமிழ்நாடு
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a குறும்பவரை |b # |c குறும்பவரை |d நீலகிரி |f கோத்தகிரி
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 11.4143
915 : _ _ |a 76.8663
995 : _ _ |a TVA_PNT_00044
barcode : TVA_PNT_00044
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

ஓவியங்கள் உள்ள பாறை ஒதுக்கின் தோற்றம்.jpg

ஓவியப் பாறைக்கு அருகில் உள்ள ஆறு.jpg

கையில் ஆயுதங்களோடு மனித உருவம்.jpg

கையில் வாள் மற்றும் கேடயத்துடன் வீரர்கள்.jpg

கையில் வாள் மற்றும் கேடயத்துடன் வீரன்.jpg

பாறை ஓவியங்கள் உள்ள இடத்திற்கு எதிரேயுள்ள வனப்பகுதி.jpg

மனித உருவங்களும் குறியீடும்.jpg

வேட்டைக்காரன் ஒருவனும் அவனுக்கு முன்னால் காட்டுப்பன்றி.jpg